ஒரு காலை
 நான் எழும்போதெல்லாம் உன் முகம் அருகில் இருந்தது சலித்தும் வேறொன்றும் தோன்றியதில்லை  இன்று காலை எதோ ஒரு மாற்றம்  எட்டு திக்கிலும் வெறும் இருட்டு  கனவு கலைந்தது போலும்  பல நேரங்கள் கடந்தும் தனிமையே நிதர்சனமென புரிந்தது  என்றாவது மறுபடியும் அந்த காலை விடியும்  என் அருகில் நீ இருப்பாய்  இம்முறை கனவு கலையாமல் பார்த்துக்கொள்கிறேன்  பஞ்சுமெத்தையும் குளிர் காற்றும் தூக்கம் தரலாம்  நீ அன்றி நான் எங்கு கனா காண்பது?