Posts

Showing posts from 2011

இவையனைத்தும் உணர்ந்தேன்

தொலைவில் நீ...
அருகில் வரத்துடிக்கும் இடை...
வடுகள் படாத மோகம்...
காமத்தில் திளைத்த காதல்...
மெத்தையில் சிணுங்கிய பெண்மை...
ஆண்மையை உணர்த்திய பாகம்...
முழுதும் நனைந்த இன்பம்...
கூச்சம் அற்ற வெறுமை...
கிறங்கிய நேரங்கள்...
கரைந்த முத்தங்கள்...
கலைந்த ஆடைகள்...
கூந்தல் கோதும் அக்கறை...
தேவை அறிந்த கைவிரல்...

இவையனைத்தும் உணர்ந்தேன்...

உன்னை கண்டிடா கோலத்தில்
கண்ட முதல் நாள் !

முன்பனி தீண்டும் முன்னே

முன்பனி தீண்டும் முன்னே
உன் சுவாசம் என்னை தீண்டியது !...

வெயில் என்னை வருடும் முன்னே
உன் பார்வை என்னை வருடியது !...

காலை கண் திறக்கும் முன்னே
எனக்காக உன் உலகம் காத்திருக்கிறது !...

நான் காத்திருப்பது ?

கண்திறக்கும் நேரத்தில் உன்னை அருகினில் காண !...

இல்லையெனில்

கண்மூடி உன் நினைவை மறக்க !...

நிலவும் என்னை காதலித்ததே ...

நிலவும் என்னை காதலித்ததே ...
நீ என்னை வர்ணிக்கும் அழகை பார்த்து !!!

நேற்றுணர்ந்தேன்...

சுகமூட்டும் இசைகள் ஆயிரம் இருந்தும்
உன் விரல் மீட்டும் இசைக்கு ஈடில்லை ...

நேற்றுணர்ந்தேன் !!!

என்னென்ன புதிதோ?

என்னை விட்டு சற்றே தொலைவில்
நீ இருந்தாலும் ...
பூமியின் மறுப்பக்கத்தில் இருப்பதை
போல் ஒரு உணர்வு !

உன் மூச்சுக்காற்று என் காதோடு
பேசிக்கொள்ளாத தருணத்தில் ...
என்னுள் எத்தனை போராட்டங்கள் !

பல நிமிடங்கள் உன்னிடம் பேசிய பின்னும் ...
ஏதோ சொல்லாமல் விட்டதை போல் ஒரு தவிப்பு !

கடந்த காலங்களில் இது நிகழ்ந்ததில்லை ...
நடக்கவிருக்கும் காலங்களில் ?

இன்னும் என்னென்ன புதிதோ?

கிறங்க சொல்லியதே !

உன் இதயம் தொட்ட ஒரு பகுதி
செயலிழந்து கிடக்க ...
விரல் தொட்ட சில இடங்கள்
வேறொன்றை நினைக்க ...
வெறித்தனமாய் உன் மீது
நான் ஆடும் ஆட்டமெல்லாம் ...
கிறங்க சொல்லியதே
இடங்கள் மாறியபின் !...

புல்வெளிப் பயணம் !...

அன்றொரு நாள், முன்பனி காலத்தில்
வைகறைப் பொழுதில்
சூரியன் வெட்கத்துடன் எட்டிப் பார்க்கும் நேரத்தில்
அந்த சிறு பனிகளால் மூடப்பட்டிருந்த
புற்களுக்கு இடையே உன்னை சந்தித்தேன் ...

அந்த அமைதியான சூழலில்
நீ உறங்கிக்கொண்டிருந்தாய் ...

நான் இதுவரை கண்ட காட்சிகளில்
இது தான் மிகச்சிறந்தது என்று
எண்ணிக கொண்டிருந்த நேரத்தில்
வெட்கப்பட்ட சூரியன் வெளியே வர
உன் துயில் கலைந்தது ...

கோவமுற்றேன் ...

என் தோழியான மேகத்திடம்
என் கண்ணாளனின் துயிலை களைத்த
சூரியனை மறைக்க கூறினேன் ...
என் எண்ணம் அவ்வண்ணமே நிறைவேறியது

என் தோழியாயிற்றே... நம்பினேன் ...

அன்றே உன்னை முதலும் கடைசியுமாய் சந்தித்தேன் ...

ஏனோ ?

என்னுள் இதுவரை இல்லாத ஒரு உணர்வு ...
புதிதாய் ஏற்பட்ட ஒரு உணர்வு ...
புதிதாய் கண்ட ஒரு உணர்வு ...

அன்று முதல் நான் தனிமையை உணர்ந்தேன்

இதன் பெயரென்ன ?

ஆசையா? பாசமா? பிரியமா?
சிநேகமா? அன்பா? இல்லை
காதலா? ...

இவைகளுள் ஒன்றும் இல்லை
ஆனால் இவைகளையும் தாண்டிய ஒரு உணர்வு ...

அன்றுமுதல் உன்னை நான் ...

நினைத்துக் கொண்டிருந்தேன்
நினைத்துக் கொண்டிருக்கிறேன்
நினைத்துக் கொண்டிருப்பேன்

மறக்கத் துடித்தேன்
துடிக்கிறேன…

காதல் கலையவில்லை

காற்று கூட புகமுடியாத இடைவெளியில்
நாம் இருவர் அமர்ந்திருக்க ...

காதல் கலையவில்லை என் உயிரே ...
துரத்தி அடிக்கப்பட்டது காமம் !

என்னுள் ஒரு மழைக்காலம்

ஒருமுறை திரும்பிப்பார் என்று
நான் எண்ணியது கேட்டது போல
மின்னல் வெட்டிய பார்வையில்
நீ திரும்ப ...

நிகழ்ந்ததே என்னுள் ஒரு மழைக்காலம் !

கேட்டேன்

காதல் கேட்டேன்
உன் படுக்கையில் கிடந்ததுறங்க ...

வாழ்க்கை கேட்டேன்
உன் கருவை நான் சுமக்க ...

வரம் கேட்டேன்
உன் மடியில் என் உயிர் பிரிய ...

மரணம் கேட்டேன்
இம்மூன்றையும் கொண்டு செல்ல ...

ஒப்பிட்டாய் ...

மேகத்துடன் ஒப்பிட்டாய் ...
நான் மறைந்து போய்விடுவேன் என்றா ?
நிலவுடன் ஒப்பிட்டாய் ...
ஒருநாள் தொலைந்துவிடுவேன் என்றா ?
வானத்துடன் ஒப்பிட மறந்தாய்
நிலையாய் வந்துவிடுவேன் என்றா ?
மறந்தாலும், மறுத்தாலும்
உன்னை தொடருவேன் ...
உன் நிழல் போல !...

மறந்தேன் ...

நான் பெண் என்பதை மறந்தேன் ...
.
.
.
உன் கைவிரலால் நானே என்னை
மீட்டிக்கொண்ட போது !...

கொடுத்துவிடு

உன்னுடன் கைகோர்க்கும் சமயத்தில்
தோழி எழுப்பியதின் காரணமோ?
நீ கோபித்து கொண்டு
என் கனவிலும் வர மறுக்கிறாய் !

நிகழும் காலங்களில்
கனவுலகம் மட்டுமே
எனக்கு சொந்தம் !..

கொடுத்துவிடு
நான் வேண்டுவது வேறல்ல !...

விஞ்ஞானம் மாறினால்

ஆயிரம் நட்சத்திரங்கள் வானில் இருந்தும்
ஒன்று மட்டும் அழகாய் தெரிவது ஏன் ?...
அந்த அழகான நட்சத்திரத்தை
நெருங்க துடிக்கும் நிலவு ...
நடந்தால் ?...
விஞ்ஞானம் மாறினால் ?...

நாம் சேர்வது சத்தியம் !

திகட்டாத காதல்

இன்றும் முதல் நாள் போலவே ...
ஆச்சர்யங்கள் குறையாமல் ...
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ...
நெடுந்தூரம் பயணிக்க இன்னும் நாட்கள் உண்டு ...
சேரும் இடம் தெரியவில்லை ...
பயணிக்கும் பாதை புரியவில்லை ...
நூறு முறை கைகோர்த்தும் சலிக்கவில்லை ...
அர்த்தமற்ற பார்வைகள் வீசியும் புரியவில்லை ...
படுக்கையில் ஒன்றாய் கிடந்தும் சலனமில்லை ...
ஓராயிரம் முறை உன்னை காதலித்தும் திகட்டவில்லை ...
உன்மேல் எனக்கு திகட்டாத காதல் !...

விட்டுச் சென்றாளோ?

காதலனை, கனவு மங்கைக்காக
விட்டுச் சென்றாளோ?
கண்ணாளனை, கண்மணிக்காக
விட்டுச் சென்றாளோ?
தன் அவனை, தோழிகளுக்காக
விட்டுச் சென்றாளோ?
என்னவனை, எனக்காக
விட்டுச் சென்றாளோ?

அவளுக்காக விட்டு செல்கிறேன்
என் உயிரில் ஒரு பாதி
அவளின் தேவதையான அவன் பிள்ளை !...

- தன் கணவனின் காதலிக்கு, மனைவி எழுதுவது ...

தரமறுத்தேன்

அவன்:
கன்னங்கள் தந்துப் போ
காகிதம் மென்மை இல்லை ...
புன்னகை சிந்திப் போ
வண்ணங்கள் போதவில்லை ...
கூந்தலை தந்துப் போ
தூரிகையில் உயிர் இல்லை ...
எண்ணங்கள் தீட்டுகின்ற
என்னவள் ஓவியம் !!!

அவள்:
கன்னங்கள் தரமறுத்தேன்
கள்வனின் எண்ணங்கள் தெரிந்து ...
புன்னகை தர மறுத்தேன்
பூக்களின் வெட்கங்கள் தெரிந்து ...
கூந்தல் தர மறுத்தேன்
இவ்வுலகமே இருளும் என்று ...
என்னைத் தர மறுத்தேன்
நான் உன்னுடையவள் இல்லை என்று தெரிந்து !!!

காதல் கூடு !

அவன்:
சிட்டுக்குருவியின் பிரிவை எண்ணி
பட்டு போன மரங்கள் இல்லை ...
காதல் கூடு களைந்து விட்டால்
இன்னொரு கூட்டில் இடமா இல்லை?

இவள்:
பறவைக் கூட்டில் இடம் ஒன்று காட்டி
தழுவ மனம் உண்டு !
கவிஞன் சொன்ன சொற்கள் கேட்டு
சாய்ந்து இளைப்பாற தோள்கள் உண்டு !

உன் பெயர் !

ஊமையாகிய நான் ...
ஓசையின்றி ...
வண்ணமின்றி ...
ஓர் ஓவியம் தீட்டினேன் ...

தித்தித்ததே !..

உன் பெயர் ஒரு காகிதத்தில் !...

நிலவு !

நிலவை மிக அருகினில்
கண்டதுண்டோ ?

என் அருகினில் வா ...

என் கண்களில் தெரியும் நிலவின் பிம்பம் !...

அள்ளி நிரப்பினால் ?

அள்ளி நிரப்பினால் - முத்தங்களும் வெறுத்து போகும்
அள்ளி நிரப்பினால் - பசியும் மறந்து போகும்
அள்ளி நிரப்பினால் - காதலும் கசந்து போகும்
அள்ளி நிரப்பினேன் - என்னை வெறுத்து விட்டாயா?...

கருவும் காதலும் !

மெல்லிய இரவில் அவன் காதோரம் சென்று ...
என் கைகளால் அவன் தலைமுடி கோதி ...
ஆதரவாய் அவன் தோள்களில் சாய்ந்து ...
அவன் கைகளை மெல்ல எடுத்து
என் வயிற்றினில் வைத்தேன் !...

காதல் சொல்லும் போது புரியாத அதே உணர்வு போலும் ...
சட்டென்று புரியவில்லை அவனுக்கு !...
அசைவைக் காட்டியதும் புரிந்துக் கொண்டான் ...

ஆயிரம் படைவீரர்களை தனியே நின்று ஜெயித்தது போன்ற ஒரு உணர்வு
மகிழ்ச்சியும் பெருமிதமும் அவனுக்கு உயர்ந்து நிற்க ...
நான் தலை குனிந்தேன் ...
முகத்தை நிமிர்த்தினான் ...
கண் திறக்க முடியாத வெட்கத்திலும் நான் மெல்ல கண் திறந்தேன்
உதடுகள் துடித்தன..
அவன் கண்களில் இருதுளி நீர் ...
நான் அவனிடம் என்னை முழுவதும் உணர்ந்த போது இருந்த அதே துளிகள்
அந்த இருதுளி கண்ணீரே அவன் காதலை சொல்லியது !...

இன்னும் ஏன் காத்திருக்கிறேன் ?

நான் தயார் !...

மரணமே வா ...
உன் படை சூழ வா ...
நான் கண்டது கனவாகும் முன்பு வா ...
என்னை கொண்டு செல் ...
என்னை கொன்று செல் ...
இந்த நிமிடத்தை உறைய வைக்க வேண்டும் வா ...
வரம் வாங்கி வா ...
அவன் மடியில் என் உயிர் பிரிய ஒரு வரம் !...

கவிதைப் புத்தகம் !

மழலை உதட்டின் நிறத்தினிலே
புத்தகம் ஒன்றை அவன் தந்தான் ...
மனம் போல வார்த்தை அமைய
விதியொன்றை அவன் தந்தான் ...
விரல் பிடிக்கும் ஆறாம் விரலாய்
எழுதுகோல் ஒன்றை அவன் தந்தான் ...

இவையனைத்தும் எழுத தூண்டும்
கவிதை ஒன்றை தருவானோ !...

உன் தேவதை !

வெடிக்கும் எரிமலையின் சாரலையும்
தெறிக்கும் மின்னலின் துளிகளையும்
கொண்டு செய்த உன் காதலியை ...

சொர்க்கத்தில் பூத்த பனிப்பூவை எடுத்து
இதழ்கள் விரித்து
பன்னீர் தெளித்து
அதனுள் அமர்த்தி தருகிறேன் ...

நீ வாடாமல் பார்த்துக்கொள்வாய்
என்ற நம்பிக்கையில் !...

உன் கவிதை !

தவித்த பறவைக்கு தண்ணீர் காட்டும் கருணை ...
அணைந்த நிலவிற்கு சூரியன் காட்டும் கருணை ...
கழிந்த பொழுதுக்கு தலையணை காட்டும் கருணை ...

இவைகளை எல்லாம் தாண்டியதல்லவா

நீ ஏவிவிட்ட கவிதை !...

பயணம் !

இரு வாரம் கழித்து, ஒரு நாள் பயணம்
தோழனுடன் கைகோர்த்து, நெடுந்தூரம் செல்கிறேன்
போகும் வழியெங்கும், ரசித்து செல்கிறேன்
கடக்கும் தூரத்துக்கு, கவிதை பாடி செல்கிறேன்

அன்று போல் இல்லாமல், இன்று பத்திரமாய் செல்வேன்
என்ற நம்பிக்கையில் நான் தொடங்கும் இந்த பயணம்

சிங்கார ஊருக்கு மட்டும் அல்ல...

சிரிக்கிறேன் !...

பாதி கண்கள் மூடி...
அருகினில் உன்னைத் தேடி...
என் உயிருக்குள் ஓடி...
நீ செய்த காயங்கள் கோடி...

இப்போது சிரிக்கிறேன்
என் இதழ்களின் கோடுகள் கூடி...

விருந்து !...

நண்பர்களுடன் ஒரு நாள் ...
நிறையப்போகும் வயிற்றுக்காக அல்ல
நிறையவிருக்கும் மனசுக்காக !..

உன் நினைவுகள் !...

உன்னை விட
உன் நினைவுகள்
மேலானவை ...!

ஏனென்றால்

அவை என்றும்
எனை விட்டு
பிரிய நினைப்பதில்லை...!

காத்து நிற்கிறேன் !

"எங்க பிரேம் இவ்ளோ காதலிச்சீங்க?...
ஒவ்வொரு நிமிஷமும் வாழ்ந்தீங்களா?...
காதல் வாழ்க்கைய இவ்ளோ பாதிக்குமா?...
உங்களுக்கு-னு ஒரு தேவதை வருவா ...
அவளோட உங்கள வச்சி பாக்க
நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் ...
எனக்கு தெரியும் ...
சொன்ன மாதிரியே அவளை தருவேன்
பத்திரமா பாத்துக்கோங்க !... "

காதலை கடந்து
காமத்தை கடந்து
காலத்தை கடந்து
தொலைதூரம் நீ சென்று
நின்ற பாதை ...

கைகோர்க்க ஒரு தேவதை வருவாள்
கையோடு உனை அழைத்து செல்ல ...
காதல் புதைக்கப்படவில்லை
விதைக்கப்பட்டிருகிறது ...

காத்து நிற்கிறேன் மழைக்காக
காத்து நிற்கிறேன் உன் காதலுக்காக !...