Posts

Showing posts from October, 2011

என்னென்ன புதிதோ?

என்னை விட்டு சற்றே தொலைவில் நீ இருந்தாலும் ... பூமியின் மறுப்பக்கத்தில் இருப்பதை போல் ஒரு உணர்வு ! உன் மூச்சுக்காற்று என் காதோடு பேசிக்கொள்ளாத தருணத்தில் ... என்னுள் எத்தனை போராட்டங்கள் ! பல நிமிடங்கள் உன்னிடம் பேசிய பின்னும் ... ஏதோ சொல்லாமல் விட்டதை போல் ஒரு தவிப்பு ! கடந்த காலங்களில் இது நிகழ்ந்ததில்லை ... நடக்கவிருக்கும் காலங்களில் ? இன்னும் என்னென்ன புதிதோ?

கிறங்க சொல்லியதே !

உன் இதயம் தொட்ட ஒரு பகுதி செயலிழந்து கிடக்க ... விரல் தொட்ட சில இடங்கள் வேறொன்றை நினைக்க ... வெறித்தனமாய் உன் மீது நான் ஆடும் ஆட்டமெல்லாம் ... கிறங்க சொல்லியதே இடங்கள் மாறியபின் !...

புல்வெளிப் பயணம் !...

அன்றொரு நாள், முன்பனி காலத்தில் வைகறைப் பொழுதில் சூரியன் வெட்கத்துடன் எட்டிப் பார்க்கும் நேரத்தில் அந்த சிறு பனிகளால் மூடப்பட்டிருந்த புற்களுக்கு இடையே உன்னை சந்தித்தேன் ... அந்த அமைதியான சூழலில் நீ உறங்கிக்கொண்டிருந்தாய் ... நான் இதுவரை கண்ட காட்சிகளில் இது தான் மிகச்சிறந்தது என்று எண்ணிக கொண்டிருந்த நேரத்தில் வெட்கப்பட்ட சூரியன் வெளியே வர உன் துயில் கலைந்தது ... கோவமுற்றேன் ... என் தோழியான மேகத்திடம் என் கண்ணாளனின் துயிலை களைத்த சூரியனை மறைக்க கூறினேன் ... என் எண்ணம் அவ்வண்ணமே நிறைவேறியது என் தோழியாயிற்றே... நம்பினேன் ... அன்றே உன்னை முதலும் கடைசியுமாய் சந்தித்தேன் ... ஏனோ ? என்னுள் இதுவரை இல்லாத ஒரு உணர்வு ... புதிதாய் ஏற்பட்ட ஒரு உணர்வு ... புதிதாய் கண்ட ஒரு உணர்வு ... அன்று முதல் நான் தனிமையை உணர்ந்தேன் இதன் பெயரென்ன ? ஆசையா? பாசமா? பிரியமா? சிநேகமா? அன்பா? இல்லை காதலா? ... இவைகளுள் ஒன்றும் இல்லை ஆனால் இவைகளையும் தாண்டிய ஒரு உணர்வு ... அன்றுமுதல் உன்னை நான் ... நினைத்துக் கொண்டிருந்தேன் நினைத்துக் கொண்டிருக்கிறேன் நினைத்துக் கொண்டிரு

காதல் கலையவில்லை

காற்று கூட புகமுடியாத இடைவெளியில் நாம் இருவர் அமர்ந்திருக்க ... காதல் கலையவில்லை என் உயிரே ... துரத்தி அடிக்கப்பட்டது காமம் !

என்னுள் ஒரு மழைக்காலம்

ஒருமுறை திரும்பிப்பார் என்று நான் எண்ணியது கேட்டது போல மின்னல் வெட்டிய பார்வையில் நீ திரும்ப ... நிகழ்ந்ததே என்னுள் ஒரு மழைக்காலம் !

கேட்டேன்

காதல் கேட்டேன் உன் படுக்கையில் கிடந்ததுறங்க ... வாழ்க்கை கேட்டேன் உன் கருவை நான் சுமக்க ... வரம் கேட்டேன் உன் மடியில் என் உயிர் பிரிய ... மரணம் கேட்டேன் இம்மூன்றையும் கொண்டு செல்ல ...

ஒப்பிட்டாய் ...

மேகத்துடன் ஒப்பிட்டாய் ... நான் மறைந்து போய்விடுவேன் என்றா ? நிலவுடன் ஒப்பிட்டாய் ... ஒருநாள் தொலைந்துவிடுவேன் என்றா ? வானத்துடன் ஒப்பிட மறந்தாய் நிலையாய் வந்துவிடுவேன் என்றா ? மறந்தாலும், மறுத்தாலும் உன்னை தொடருவேன் ... உன் நிழல் போல !...