Posts

காதலின் பிரிவு

காதலின் பிரிவு, காயம் அல்ல ... தனியே தவித்த இரவுகள், நரகமும் அல்ல ... முத்தம் சிந்தாத உதடுகளை, நான் வெறுக்கவும் அல்ல ... உன்னிடம் உணர்ந்த அனைத்தும், பொய்யானதும் அல்ல ... காணக் காத்திருக்கிறேன் !... பிரிவின் வலி தெரியுமுன், உன்னை சேர ... என் இரவுகளை நரகமாக்காமல் காத்துக் கொள்ள ... முத்தம் சிந்தாத உதடுகளில் தேன் சுரக்க ... உன்னிடம் உணரவிருக்கும் மிச்சத்திற்காக ...

என் காதல் !

நிலவிற்கு என் காதல் நிழலோ ? எடுத்து செல்கிறது, மறையும் பொழுது ... மறையும் என் காதல் ஒரு நாள் ஒளி பெறுமோ ? கண்ணா ... காத்திருக்கும் இந்த காதலிக்கு விடை என்னவோ?

முதல் முத்தம்

நூறு இரவுகள் ... ஆயிரம் முத்தங்கள் கழிந்தும் உன் முதல் முத்தம் தான் நான் பெற்றெடுத்த முதல் பிள்ளை !!!

ரயில் பயணம்

நிலவை நெருங்க ரயில் பயணம் ... காற்றை கிழித்துக்கொண்டு உறையும் பனி நடுவே சில்லென்ற இந்த பயணம் ... ரயிலை தொடரும் நிலவிற்காக அல்ல உறங்கி கொண்டிருக்கும் என் நிலவிற்காக !!!

இவையனைத்தும் உணர்ந்தேன்

தொலைவில் நீ... அருகில் வரத்துடிக்கும் இடை... வடுகள் படாத மோகம்... காமத்தில் திளைத்த காதல்... மெத்தையில் சிணுங்கிய பெண்மை... ஆண்மையை உணர்த்திய பாகம்... முழுதும் நனைந்த இன்பம்... கூச்சம் அற்ற வெறுமை... கிறங்கிய நேரங்கள்... கரைந்த முத்தங்கள்... கலைந்த ஆடைகள்... கூந்தல் கோதும் அக்கறை... தேவை அறிந்த கைவிரல்... இவையனைத்தும் உணர்ந்தேன்... உன்னை கண்டிடா கோலத்தில் கண்ட முதல் நாள் !

முன்பனி தீண்டும் முன்னே

முன்பனி தீண்டும் முன்னே உன் சுவாசம் என்னை தீண்டியது !... வெயில் என்னை வருடும் முன்னே உன் பார்வை என்னை வருடியது !... காலை கண் திறக்கும் முன்னே எனக்காக உன் உலகம் காத்திருக்கிறது !... நான் காத்திருப்பது ? கண்திறக்கும் நேரத்தில் உன்னை அருகினில் காண !... இல்லையெனில் கண்மூடி உன் நினைவை மறக்க !...

நிலவும் என்னை காதலித்ததே ...

நிலவும் என்னை காதலித்ததே ... நீ என்னை வர்ணிக்கும் அழகை பார்த்து !!!

நேற்றுணர்ந்தேன்...

சுகமூட்டும் இசைகள் ஆயிரம் இருந்தும் உன் விரல் மீட்டும் இசைக்கு ஈடில்லை ... நேற்றுணர்ந்தேன் !!!

என்னென்ன புதிதோ?

என்னை விட்டு சற்றே தொலைவில் நீ இருந்தாலும் ... பூமியின் மறுப்பக்கத்தில் இருப்பதை போல் ஒரு உணர்வு ! உன் மூச்சுக்காற்று என் காதோடு பேசிக்கொள்ளாத தருணத்தில் ... என்னுள் எத்தனை போராட்டங்கள் ! பல நிமிடங்கள் உன்னிடம் பேசிய பின்னும் ... ஏதோ சொல்லாமல் விட்டதை போல் ஒரு தவிப்பு ! கடந்த காலங்களில் இது நிகழ்ந்ததில்லை ... நடக்கவிருக்கும் காலங்களில் ? இன்னும் என்னென்ன புதிதோ?

கிறங்க சொல்லியதே !

உன் இதயம் தொட்ட ஒரு பகுதி செயலிழந்து கிடக்க ... விரல் தொட்ட சில இடங்கள் வேறொன்றை நினைக்க ... வெறித்தனமாய் உன் மீது நான் ஆடும் ஆட்டமெல்லாம் ... கிறங்க சொல்லியதே இடங்கள் மாறியபின் !...