கருவும் காதலும் !

மெல்லிய இரவில் அவன் காதோரம் சென்று ...
என் கைகளால் அவன் தலைமுடி கோதி ...
ஆதரவாய் அவன் தோள்களில் சாய்ந்து ...
அவன் கைகளை மெல்ல எடுத்து
என் வயிற்றினில் வைத்தேன் !...

காதல் சொல்லும் போது புரியாத அதே உணர்வு போலும் ...
சட்டென்று புரியவில்லை அவனுக்கு !...
அசைவைக் காட்டியதும் புரிந்துக் கொண்டான் ...

ஆயிரம் படைவீரர்களை தனியே நின்று ஜெயித்தது போன்ற ஒரு உணர்வு
மகிழ்ச்சியும் பெருமிதமும் அவனுக்கு உயர்ந்து நிற்க ...
நான் தலை குனிந்தேன் ...
முகத்தை நிமிர்த்தினான் ...
கண் திறக்க முடியாத வெட்கத்திலும் நான் மெல்ல கண் திறந்தேன்
உதடுகள் துடித்தன..
அவன் கண்களில் இருதுளி நீர் ...
நான் அவனிடம் என்னை முழுவதும் உணர்ந்த போது இருந்த அதே துளிகள்
அந்த இருதுளி கண்ணீரே அவன் காதலை சொல்லியது !...

இன்னும் ஏன் காத்திருக்கிறேன் ?

நான் தயார் !...

மரணமே வா ...
உன் படை சூழ வா ...
நான் கண்டது கனவாகும் முன்பு வா ...
என்னை கொண்டு செல் ...
என்னை கொன்று செல் ...
இந்த நிமிடத்தை உறைய வைக்க வேண்டும் வா ...
வரம் வாங்கி வா ...
அவன் மடியில் என் உயிர் பிரிய ஒரு வரம் !...

Comments

பிரபலமான பதிவுகள்

ஒரு காலை

மாற்றம்

மீட்டெடுத்த காதல்