நான் எழும்போதெல்லாம் உன் முகம் அருகில் இருந்தது சலித்தும் வேறொன்றும் தோன்றியதில்லை இன்று காலை எதோ ஒரு மாற்றம் எட்டு திக்கிலும் வெறும் இருட்டு கனவு கலைந்தது போலும் பல நேரங்கள் கடந்தும் தனிமையே நிதர்சனமென புரிந்தது என்றாவது மறுபடியும் அந்த காலை விடியும் என் அருகில் நீ இருப்பாய் இம்முறை கனவு கலையாமல் பார்த்துக்கொள்கிறேன் பஞ்சுமெத்தையும் குளிர் காற்றும் தூக்கம் தரலாம் நீ அன்றி நான் எங்கு கனா காண்பது?
காலம் மாறலாம் காமம் மாறலாம் காதலும் மாறுமோ? மாற்றத்தை ஏற்காத நெஞ்சம் தாம் மாறியதை அறிய மறந்ததேன்? மாற்றங்கள் இவ்வுலகில் நிரந்தரம் ஆனால்... எக்காலத்திலும் நம் சொந்தம் மாறுவதில்லை அந்த பயமும் எமக்கு இல்லை இடையில் வெறும் ஊடலே நம் காதல் மாறுவதில்லை !!!
காலம் மாறி வரும் தருணத்தில் எங்கோ என்னை இழந்தது போன்ற உணர்வை ஒரு நொடியில் மீட்டெடுதேன் உன் கண்கள் பேசிய ஒரு சில வார்த்தைகளில் !. தொலைந்து நானும் போகவில்லை ஓளித்து வைக்கப்பட்டிருந்தேன் உன் கைகளுக்குள் பத்திரமாக !
Comments
Post a Comment